செய்திகள்

இலங்கையின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான பயணத்துக்கு அமெரிக்கா துணைநிற்கும்: ஜோன் கெரி

இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான பயணத்தில் அமெரிக்க மக்கள் துணையாக நிற்பர் என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி , தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதனூடாக இலங்கையின் கடந்த கால பிழைகளை திருத்துவதற்கு அமரிக்கா சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என்றும் கூறினார்.

இலங்கைக்கு இரு நாள் விஜயம் செய்துள்ள அவர் கொழும்பில் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்ததுடன், இலங்கையுடனான அமெரிக்காவின் உறவை மேலும் விரிவு படுத்தவும் ஆழமாக்கவும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.