இலங்கையின் தாமரை கோபுரம் சீனாவின் புதிய உளவு மையம்! எச்சரிக்கிறது இந்தியா
கொழும்பில் மத்தியில் சீன நிதிஉதவியுடன் கட்டப்பட்டுவரும் தாமரை கோபுரம் சீனாவின் புதிய உளவு மையம் எனவும் இந்த தாமரைக்கோபுரம் தெற்காசிய வலய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையுமென இந்திய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு தந்திரோபாய நிபுணர் அக்சர் ரோய் தெற்காசிய ஆய்வுக்குழு இணையதளத்துக்கு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
104.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொழும்பு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 26 மீட்டர் உயரத்தில் தாமரை வடிவில் இக்கோபுரம் அமையவுள்ளது.
இந்த கோபுரத்தை சீன எக்ஸ்சிம் வங்கியின் நிதிஉதவியுடன் சீனாவின் இரண்டு பாதுகாப்பு நிறுவனங்கள் நிர்மாணித்துள்ளன.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் ஆகியவற்றை நோக்காக கொண்ட இந்த தாமரை கோபுரத்தை சீனா உளவு மையமாக பயன்படுத்தவே உருவாக்குகிறது.
தெற்காசிய வலய நாடுகளிலேயே உயரமான இக்கோபுரத்தில் இருந்து இந்தியா உட்பட தெற்காசியாவை உளவு பார்க்க முடியும்.
இலத்திரனியல் தொடர்பாடல் உளவு மையமாக பயன்படுத்தப்படும் இத்தாமரை கோபுரமானது தெற்காசிய வலய நாடுகளுக்கு ஆபத்தானது.
இதனை மஹிந்த அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது என்றார்.