செய்திகள்

இலங்கையின் பந்துவீச்சு தந்திரோபாயம் சரியானதா?

New Zealand v Sri Lanka

2015 உலககிண்ணத்தின் தலைசிறந்த அணிகள் வேறுவேறு கண்டங்களை சேர்ந்தவை. அவர்களது அணித்தலைவர்கள் ஓவ்வொருவரும் ஏனைய தவைர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். வேறு வேறு பாணியை கொண்டவர்கள். எனினும் அவுஸ்திரேலியா, நிறுசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மீண்டும் புத்துயுர் பெற்றுள்ள பாக்கிஸ்தான் ஆகியன தங்கள் அணியை தெரிவுசெய்யும் விடயத்தில் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளன,நான்கு முன்னணி பந்து வீச்சாளர்கள் ஏழு துடுப்பாட்ட வீரர்கள் என்பதே அவர்களின் தெரிவு.

எனினும் இலங்கை அணி இந்த விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. மூன்று முன்னணி பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகின்றது.நியுசிலாந்துடனான போட்டியில் இறுதி 15 ஓவர்களில் ஆன்டர்சனும், ரொஞ்சியும் 134 ஓட்டங்களை பெற்றனர்.

இங்கிலாந்து அணியுடனான போட்டியில் ரூட் பட்லர் ஜோடி இறுதி 14 ஓவர்களில் 148 ஓட்டங்களை பெற்றனர்.எனினும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் அபாரம் காரணமாக இலங்கை அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. எனினும்அந்த போட்டியில் தாங்கள் பிழையான தந்திரோபாயத்தை பயன்படுத்திய போதிலும் அதிஸ்டவசமாக தப்பினோம் என கருதுவதற்கு பதிலாக இலங்கை அணியினர் அந்த தந்திரோபாயத்தையே தொடர்ந்தும் பயன்படுத்த முனைகின்றனர்.

நாங்கள் பயன்படுத்தும் அணியால் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதால் அணியில் மாற்றங்களை மேற்கொள்ள மாட்டோம் என அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்னர் இலங்கை அணித்தலைவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணயின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் இல்லாத நிலையிலும் உலகின் வலுவான நடுவரிசை ஆட்டக்காரர்களை கொண்ட அணிக்கு எதிராக இலங்கை மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. அணிக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கின்றது என்பதை முன்கூட்டியே உணரமுடிந்தது.எதிர்பார்த்தது நடைபெற்றுள்ளது.
ஆஸியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும். சுழற்பந்துவீச்சாளர்களை திறமையாக விளையாடக்கூடிய ஆஸி வீரர்களான கிளார்க் மற்றும் ஸ்மித் ஜோடி இருவரும் சிரமப்படாமல் 100 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்தனர்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்படவில்லை என பின்னர் சச்சித்திர சேனநாயக்க தெரிவித்தார்.இதன் காரணமாகவே சுழற்பந்துவீச்சாளர்களை ஆஸி அணி இலகுவாக விளையாடியது.  இதன் காரணமாகவே மூன்று முன்னணி பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் தந்திரோபாயம் ஆபத்தானது. ஆடுகளம் சாதகமாக அமையாதபோதோ அல்லது மூவரில் ஒருவர் சிறப்பாக பந்துவீசாதபோதோஅல்லது எதிரணியின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பாக அமையும் போதோ அணித்தலைவருக்கான மாற்று வழிகள் இல்லாமல் போய்விடுகின்றது.

இதன் காரணமாக இலங்கை மிக பாதிப்பினை ஏற்படுத்த கூடிய வழிமுறைகளை பின்பற்றவேண்டிநேர்ந்தது. திசார பெரேரா ஓருபோதும் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசக்கூடியவரல்ல,தான் சிறந்த நிலையிலிருக்கும்போது 20 முதல் 35 ஓவர்களிற்குள் விக்கெட்களை வீழத்த கூடியவர் அவர், இந்த போட்டித்தொடரில் அவர் நல்லநிலையில்லை,எனினும் இங்கிலாந்துடனான போட்டியில்45வது ஓவரை வீச அழைக்கப்பட்ட அவர் 25 ஓட்டங்களை வாரிவழங்கினார்,

207983

இன்றை போட்டியில் 44 வது ஓவரில் அழைக்கப்பட்ட அவர் 20 ஓட்டங்களை கொடுத்தார்,வேறு வழியின்றி அவர் 49 ஓவரில் மீண்டும் அழைக்கப்பட்;டார் 19 ஓட்டங்களை வழங்கினார். மலிங்க பழைய நிலைக்கு மீண்டுள்ளார், யோக்கர்களை சரமாரியாக வீசினார், விக்கெட்களை வீழ்த்தினார்,எனினும் இறுதி 14 ஓவர்களில் அவர்கள் 174 ஓட்டங்களை வழங்கினர்.

நாங்கள் எங்கள் தந்திரோபாயங்களை மாற்றவேண்டும்,இறுதி ஓவர்களில்ஏதாவதுசெய்யவேண்டும்,மலிங்கவுடன்சமமாக பந்துவீசக்கூடிய ஓருவர் அவசியம் என பின்னர் சச்சித்திர தெரிவித்தார்.

இலங்கை அணி எதிரணிகளிடமிருந்து பாடம் கற்கவேண்டும். அது தவறில்லை ஏதாவதுசெய்யவேண்டும்,மலிங்கவுடன்சமமாக பந்துவீசக்கூடிய ஓருவர் அவசியம் என பின்னர் சச்சித்திர தெரிவித்தார். இலங்கை அணி எதிரணிகளிடமிருந்து பாடம் கற்கவேண்டும்,அது தவறில்லை