செய்திகள்

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலயில்

நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி இத்திறந்தவெளி மிருகக்காட்சி சாலை திறக்கப்படவுள்ளது.

இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் இந்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.