செய்திகள்

இலங்கையின் வடபகுதி தமிழர்களின் உரிமைகளைஉறுதிப்படுத்தும் பொறுப்பு இந்தியாவிற்கில்லை

இலங்கையின் வடபகுதி தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் நாடு இந்தியா என இனிமேலும் கருதக்கூடாது என இலங்கையின் எரிசக்தியமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை தமிழர்களின் பார்வையிலிருந்து பார்ப்பதை இந்தியா கைவிடவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை நோக்கிய இந்திய பிரதமரின் யதார்த்தபூர்வமான அணுகுமுறை வர்த்தக, தொழில்நுட்ப மற்றும் அரசியல் உறவுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு உதவக்கூடும்,இதன் மூலம் இரு நாடுகளுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்ககூடிய சூழ்நிலை உருவாகலாம்.

இலங்கையின் வடபகுதி தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் நாடுஇந்தியா என இனிமேலும் கருதக்கூடாது அது கடந்தகால விடயமாகவேண்டும். இலங்கை தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்வேண்டும். இந்தியாவை இந்த விடயத்தில் உள்ளே இழுக்ககூடாது.

இலங்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டம் மாறவேண்டும்,இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியோ அல்லது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியோ இல்லை என்பதை உணரவேண்டும்,நாங்கள் தனித்துவமான கலாச்சாமொன்றை இங்கு உருவாக்கியுள்ளோம்.

விடுதலைப்புலிகளுக்கு இந்தியா வழங்கிய ஆதரவு சிங்கள மக்களின் ஆன்மாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.திரைப்படம், கிரிக்கெட், இசை போன்றவற்றில் சிங்கள மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் இந்தியா அதனை மாற்றலாம். வெளிநாடுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் இலங்கை தொழில்நுட்ப கணக்காய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

வடபகுதியில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட புகையிரத திட்டத்திதை இதனை விட குறைந்த செலவில் முன்னெடுத்திருக்கலாம்,புகையிரத பாதைகளை முன்னெடுப்பதற்கு ஆகும் செலவை விட நான்கு மடங்கு அதிகமாக செலவாகியுள்ளது.

இதேபோன்று சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைபு திட்டங்களையும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தியிருக்கவேண்டும். ராஜபக்ச காலத்தில் காணப்பட்ட நம்பி;க்கையீனங்களை கைவிட்டுவிட்டு சமமான பங்காளிகளாக பணியாற்றுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வாய்ப்புகிடைத்துள்ளது.

சீனாவே அடுத்த பொருளாதார வல்லரசு என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்,சீனா குறித்து இலங்கை எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என இந்தியா தெரிவிக்க முடியாது. இலங்கை அறிவிக்கப்படாத பனிப்போரில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிக்குண்டுள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.