செய்திகள்

இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை எவருக்கும் குந்தகம் செய்யாது: பிரித்தானியாவில் ஜனாதிபதி

எவருக்கும் குந்தகம் செய்யாதவகையில் இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கையை கையாளும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு உறுதி அளித்துள்ளார்.

லண்டனில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையின் அணிசேரா கொள்கையினையும் வலியுருத்தி உள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு பற்றி விளக்கமளித்த ஜனாதிபதி சீனா இலங்கையின் நன்பன் என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 British Minister_2