செய்திகள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இளைஞன் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து   சனிக்கிழமை மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சுற்றுலாப் பயணியாக சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த கோபிநாத் ( 35 வயது) என்பவரது உடமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிலையில் அவர் கொண்டு வந்த பையில் இருந்த, தலா ஒரு கிலோ  கொண்ட  5 தேயிலை பக்கெட்டுகளையும் பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம்  13 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதையடுத்து அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.  கோபிநாத்தின் கடவுச்சீட்டை ஆய்வு செய்தபோது அவர் பலமுறை இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து சென்றமை தெரிந்தது.
இதனால்,  அவர் இதுபோன்று  பலமுறை தங்கத்தைக் கடத்தி வந்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
n10