செய்திகள்

இலங்கையிலிருந்து வெளியேறும் இந்தியாவின் முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல்

இலங்கையில் மேற்கொண்டுள்ள தனது உற்பத்தியிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளது.

தனது துணை நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 20.4 கோடி இந்திய ரூபாய்க்கு இ.பி. கிரேஸி அண்ட் கம்பெனிக்கு விற்பனை செய்துள் ளது. முழுவதும் ரொக்கமாக இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது.

டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் தனது சர்வதேச வர்த்தக நடவடிக்கையாக இலங்கையில் தொழிலைத் தொடங்கியது. லங்கா ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் என்கிற இந்த நிறுவனம் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் முதலீட்டைக் கொண்டு தொடங்கப்பட்டது.

உற்பத்தி மற்றும் விநி யோகம் என்கிற அடிப்படையில் கால்வனைஸ்டு மற்றும் நெய்ல் வயர்கள் உற்பத்தி செய்தது. ஆண்டுக்கு 14,400 டன் உற்பத்தி திறன் கொண்டது.

சர்வதேச தொழில்களை இணைக்கும் விதமாக 2013-ல் சர்வதேச அளவில் கையகப்படுத்தியது. கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கு ரூ.74 கோடி வர்த்தகம் செய்திருந்தது.