செய்திகள்

இலங்கையில்இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் பல உள்ளன

இலங்கையில்இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியபணிகள் பல இருப்பதாக அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பிரதிஇராஜங்க அமைச்சர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவரது விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஜனவரி 8 ம் திகதி தேர்தல் மூலமாக இலங்கை மக்கள் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை உணர்வை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்ய கிடைத்தமையை முக்கியமானதாக கருதுகின்றேன்.  சிவில்அமைப்பினர், தனியார்துறையினர் மற்றும் அரசியல்கட்சிகளுடனான சந்திப்பின்போது இந்த நம்பிக்கையை இலங்கைக்கான ஓளிமயமான எதிர்காலமாக மாற்றுவது குறித்து பலர் என்னுடன் விவாதித்தனர்.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் உட்பட பலருடன் பலனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.  முக்கிய தமிழ் கட்சியான தமிழ்கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்,எனினும் போதிய காலஅவகாசமின்மையால் யாழ்ப்பாணம் செல்ல முடியவில்லை. அனைத்து தரப்பினருடனான சந்திப்பின்போதும்,எமது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் விதத்தில் இரு நாடுகள் மத்தியிலானஉறவுகள் வளர்ச்சியடையவேண்டும் என்ற எனது விருப்பத்தை வெளியிட்டேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.