செய்திகள்

இலங்கையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.பதில் பொலிஸ் மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)