செய்திகள்

இலங்கையில் உள்ள பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய தூதரின்முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இருக்கும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் விமானங்கள் கிடைக்கும் போது உடனடியாக நாட்டிற்கு திரும்பும் படி ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய தூதர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.அதன் படி ஏப்ரல் 11-ஆம் திகதி கொழும்புவில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானத்தை இயக்க உத்தேசித்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதால், 1979 என்ற எண்ணை அழைக்கும் படியும், ஸ்ரீலங்காவில் இருக்கும் பிரித்தானியார்கள் உடனடியாக திரும்பும்படி அறிவுறுத்துவதாகவும் UK in Sri Lanka தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிற திகதிகளில் மக்கள் வெளியேற விரும்பினால் என்ன விமான சேவைகள் கிடைக்கக்கூடும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயண ஆலோசனைகளுக்கும், புதுப்பித்த விமான தகவல்களுக்கும் www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/coronavirus மற்றும் @UKinSriLanka-ஐ பின்பற்றும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(15)