செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கை: புதுடில்லி விஜயத்தில் ஒபாமா உரை

நீண்டகாலத்துக்குப் பின்னர் புதிய ஜனநாயக நம்பிக்கைகள் இலங்கையில் ஏற்பட்டுள்ளன. எனவே அவற்றைத் தக்கவைக்க இந்தியா போன்ற அயல் நாடுகள் உதவவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு பல்வேறு தரப்பினரைச் சந்தித்ததுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இதன்போது சிறிகோட்டை கேட்போர் கூடத்தில் அமெரிக்க உரையாற்றியபோதே இலங்கை தொடர்பில் தன்னுடைய கருத்தை ஒபாமா இவ்வாறு வெளியிட்டார்.

தனது உரையில் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவமுடியும். நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல அதிகாரம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் இலங்கைக்கு இந்தியா ஒரு வகிபங்கை கொடுக்கமுடியும். பர்மா தொடக்கம் இலங்கை வரை தற்போது அமைதி நிலை காணப்படுகிறது.

இங்கே ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கைகள் இருக்கிறன. எனவே இந்தியா தனது தேர்தல் அனுபவங்கள், அறிவியல் மருத்துவ நிபுணத்துவங்களை இந்த நாடுகளுடன் பகிரமுடியும். குறிப்பாக தொற்று நோய்களால் ஏற்படும் சிசு மரண வீதத்தை குறைப்பதற்கு இந்தியா தன்னிடமுள்ள அறிவியல், மருத்துவ நிபுணத்தவத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்” என்றார்.