செய்திகள்

இலங்கையில் ஐ.நா. பிரதிநிதி பப்லோ டி கிரிப் – மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் கொழும்பில் முகாமிட்டுள்ளார். அவர் தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பப்லோ டி கிரிப் 6 நாட்கள் பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீர அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார். இலங்கையில் 6 நாட்கள் தங்கும் அவர் அரசு பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.