செய்திகள்

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா : 4 மாத குழந்தைக்கும் தொற்று

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர்களிடையே 4 மாத குழந்தையொன்று உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த குடும்பமொன்றே இவ்வாறாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த குடும்பத்தை சேர்ந்த பிரதான நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என தெரியவந்துள்ளது. -(3)