செய்திகள்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதில் 11 உயிரிழப்புகள் நேற்று இடம்பெற்ற விபத்துகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று 120 விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் நாடு முழுவதும் 120இற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது. அதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளிலேயே இவ் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.அதன்படி, நேற்றைய தினம் மாத்திரம் பதிவான வீதி விபத்துக்களில் சிக்கி 11 பேர் உயிரிழந்தாகவும், மற்றைய நால்வர் முன்னதாக ஏற்பட்ட விபத்துக்களில் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.(15)