செய்திகள்

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் பலி!

களனிப் பகுதியில் ரயில் கடவையொன்றில் இராணுவ பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பஸ்ஸில் 4 இராணுவத்தினர் இருந்துள்ளதுடன் அவர்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.