செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றியோர் எண்ணிக்கை 150ஆனது : கொழும்பிலேயே அதிகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 150ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 4 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் மருமகன் மற்றும் பேரப்பிள்ளை அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரில் கொழும்பு மாவட்டத்தில் 33 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும் , களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும் , கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும் , கண்டி மாவட்டத்தில் 4 பேரும் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் , இரத்தினப்புரி மாவட்டத்தில் 3 பேரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 2 பேரும் , காலி , கேகாலை , மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தனிமைப்படுத்தும் நிலையங்களில் 34 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-(3)