செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

இலங்கையில் தற்போதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 50 பேர் பூரண குணமடைந்த வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இதுவரை இலங்கையில் மொத்தமாக 190 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 இற்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)