செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தற்போது 198 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)