செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 203ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் வரையில் 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினத்தில் புதிதாக 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரொனா தொற்றாளர் எண்ணிக்கை 203ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இது வரையில் 55 பேர் வரையிலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறாக குணமடைந்தோரில் 4 மாத குழந்தையும் உள்ளடங்குகின்றது.
அத்துடன் தொற்றுக்கு உள்ளானோரில் 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)