செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரிப்பு

இலங்கையில் சற்று முன்னர் இனம் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்களையும் விட மேலும் ஒருவர் தற்போது இனம் காணப்பட்டுள்ளார். இத்துடன் மொத்தமாக 242 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மூன்று பெண்களுக்கே இந்த தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா தோற்றாளர்களில் எண்ணிக்கையில் மற்றுமொரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ஒருவர் தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டு மொத்த பாதிப்பு 242 ஆக அதிகரித்துள்ளது.(15)