செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 242ஆக உயர்வு

இன்றைய தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 242ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களிடையே புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் மூவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் இது வரையில் 70 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, தற்போது 164 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். -(3)