செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் 77 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 164 பேர் தற்போது கொரோனா விசேட கண்காணிப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.(15)