செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 110ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 110ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்திற்குள் மாத்திரம் புதிதாக 4 பேர் அந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 110ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இவ்வாறாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் இது வரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அந்த நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் 199 பேர் வரையிலானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். -(3)