செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.மேலும் 173பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியம வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்றைய தினம் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நேற்றைய தினம் மட்டும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் 173பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)