செய்திகள்

இலங்கையில் கொரோனா! 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்

கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக இலங்கையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை இலங்கையில் இது வரையில் 106 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அத்துடன் இந்த நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 238 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)