செய்திகள்

இலங்கையில் சற்று முன்னர் மேலும் 13 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய சிலரே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.(15)