செய்திகள்

இலங்கையில் சூதாட்டம் இடம்பெற்றதை சர்வதேச கிரிக்கட் சபை உறுதிசெய்தது

இலங்கையில் 2012 இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா கிறிக்கெட் லீக் போட்டிகளின் போது கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சர்வதேச தடைக்குட்பட்டுள்ள பங்களாதேஷின் அணியின் முன்னாள் தலைவர் முகமட் அஷ்ரபுல் இதனை ஐசிசிக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிறிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியிருந்த அவர் ருகுணுரோயல் மற்றும் வயம்பா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தான் இவ்வாறான கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.