செய்திகள்

இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்கா உதவும் : ஜோன் கெரி

இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவதற்காக எவ்வேளையிலும் அமெரிக்கா உதவும் என அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இதன்படி இரு நாடுகளுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்றை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜோன் கெரி கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.