செய்திகள்

இலங்கையில் தற்கொலை அதிகமாக இடம்பெறும் பிரதேசம் இது தான்

புஸ்ஸல்லாவை பிரதேசம் தற்போது இலங்கையில் தற்கொலை அதிகமாக இடம்பெறும் இடமாக மாறி வருகின்றது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இரட்டைப்பாதை அட்டபாகை தோட்டம் 01, வகுகப்பிட்டிய சவுக்குமலை தோட்டம் 01, புசல்லாவ பிளக்போரஸ்ட் தோட்டம் 02, புஸ்ஸல்லாவ நகரம் 02, புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் 02, உட்பட 8 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

இதில் 07 பாடசாலை மாணவர்களும் வர்த்தகர் ஒருவரும் அடங்குவர். இவ்வாறான நிலையில் 09வது தற்கொலை புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் (2015.05.13) அன்று நிழ்ந்துள்ளது.

பகல் 11.30 மனியளவில் 63 வயதையுடைய முத்தையா குமாரசாமி என்பவர் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் வீட்டு கூரையில் கயிறில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார் என புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே மரணமான இவரை புஸ்ஸல்லாவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளியாக வேலை புரிந்த 63 வயது முத்தையா குமாரசாமி இவர் ஓய்வு பெற்று மனைவியையும் இழந்த நிலையில் தனது கடைசி மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.