செய்திகள்

இலங்கையில் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பான் கி மூன்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் நடவடிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தை குறித்த ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூனின் வேண்டுகோளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அவரது பேச்சாளர் ஸ்டெபனி டுஜாரிக் தெரிவித்திருக்கிறார்.

அதேவளை, நடைபெறும் தேர்தலானது, சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற ஐ. நா செயலாளரின் கோரிக்கையினையும் வலியுறுத்துவதாகவும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.