செய்திகள்

இலங்கையில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாம் ; நாமல் கூறுகின்றார்

நாட்டில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இவற்றை சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாதெனவும் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிற்றர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பங்கள் இடம்பெறுவதனை அறியக் கூடியதாகவுள்ளது. இது துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. இவற்றை சட்டங்களால் மாத்திரம் தடுக்க முடியாது. இவற்றுக்கு எதிராக சமூக புரட்சிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். என அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.