செய்திகள்

இலங்கையில் போதைப்பொருள் தடுப்பு காரியாலயத்தை நிறுவ ஐ.நா. இணக்கம்

சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றவியல் பேரவையின் பிரதான தடுப்பு காரியாலயத்தை இலங்கையில் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதான காரியாலயத்தை இலங்கையில் நிறுவுமாறு நீதியமைச்சர் விடுத்த கோரிக்கையை ஐ.நா. கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளது என்று நீதியமைச்சு அறிவித்துள்ளது.

பிரதான காரியாலயத்தை இலங்கையில் நிறுவுதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா. பணிப்பாளர் யூரி பொடேடோ, இலங்கைக்கு வருகைதந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான தடுப்பு காரியாலத்தை இலங்கையில் நிறுவுவதன் ஊடாக இலங்கைக்குள் போதைப்பொருட்களை தடுப்பதற்காக இணைந்த விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கமுடியும் என்று நீதியமைச்சு அறிவித்துள்ளது.

அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை, இலங்கை பொலிஸ் மற்றும் முப்படைகளுடன் இணைந்த இந்த நிறுவனம் செயற்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.