செய்திகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீறப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த ஆண்டிலும் மனித உரிமைகள் பாரிய சவாலுக்குள்ளானதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கடந்த வியாழக்கிழமை வொசிங்டனில் இந்த அறிக்கையை வெளியிட்டு வைத்தார். சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் தாக்கப்பட்ட துன் புறுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள் ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காணாமற்போதல் கண்டபடி கைதுசெய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை, தடுப்புக்காவலில் உள்ளோர் துஷ்பிரயோகம் செய்யப்படுதல், வல்லுறவு, ஏனைய வடிவங்களிலான பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகள் இலங்கை இராணுவம், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்கள் கண்டிக்கப்படாத நிலை பரவலாக உள்ளதாகவும் போருக்குப் பிந்திய நிலையிலும், ஆட்கள் காணாமற்போதல் நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊடக அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கத்தை விமர்சிப்போர், அரச ஆதரவாளர்களால் துன்புறுத்தப்படுவது அச்சுறுத்தப்படுவது தாக்கப்படுவது போன்ற சம்பங்களால் பரவலான அச்சம் காரணமாக ஊடகவியலாளர்கள் சுய தணிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததால் பொதுவான ஜனநாயக செயற்பாடுகள் முடக்கமடைந்ததாகக் கூறும் அந்த அறிக்கை, அரச படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களால் பெரும்பாலும் தமிழ்ப் பிரதேசங்களில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெற்றது மற்றொரு முக்கியமான மனித உரிமை பிரச்சினை என சுட்டிக் காட்டியுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்ததுடன் இடம் பெயர்ந்தோர் உரிமைகள் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகவும் இடம்பெயர்ந்தோரின் மீளக்குடியமர்வை சுதந்திரமாக தீர்மானிக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மிக குறைந்தளவு அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2009 இல் முடிவுக்கு வந்தபோரில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபி மான சட்ட மற்றும் அனைத்துலக மனித உரிமை சட்ட மீறல்களில் ஈடுபட்ட ஒருவரேனும் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இலங்கையிலும், நைஜீரியாவிலும் மக்கள் தமது தலைவர்களை மாற்றும் உரிமையைப் பயன்படுத்திய தேர்தல்கள் நடைபெற்றதாகவும், இந்த பிந்திய மாற்றங்கள் அறிக்கையில் சேர்க்கப்பட வில்லை என்று கூறினார்.