செய்திகள்

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் உயிரிழப்பு பதிவானது

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தோடு மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 7 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)