செய்திகள்

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்

இன்று திங்கட்கிழமை மட்டும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 08 பேரும் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.(15)