செய்திகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு தடை!

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு தொடர்பான விபரங்கள் வருமாறு,

1. ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்
2.சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்
3. ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
4. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
5. ஜமியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
6. தாருல் அதர் @ ஜாமிஉல் அதர்
7. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
8. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
9. AL-Qaeda அமைப்பு
10. Save the pearls அமைப்பு
11. Super Muslim அமைப்பு
-(3)