செய்திகள்

இலங்கையில் 24 மணி நேரத்தில் 20 கொரோனா தொற்றாளர்கள்

இன்றைய தினத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 பேரில் 6 பேர் பேருவலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். அத்துடன் இந்த 6 பேரில் நான்கு பேர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் உறவினர்களாகும்.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அகுரன பிரதேசத்தில் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10ஆவது நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. -(3)