செய்திகள்

இலங்கையுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்த ஓபாமா விருப்பம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இலங்கையுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் அசோசியேட்டட் செய்திச்சேவை-(ஏபீ) தெரிவித்துள்ளது
இலங்கையின் ஏதேச்சாதிகார தலைவரின் ஆச்சரியமளிக்கும் தோல்வியும்,ஒடுக்குமறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும்,அமெரிக்காவுடன் இலங்கை உறவுகளை மீண்டும் சரிசெய்யும், சீனாவிடமிருந்து தனிமைப்படும் என்ற நம்பிக்கையை ஓபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ளது.
தென்னாசியாவிற்கான பிரதிவெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலமாக உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது நோக்கிய முக்கிய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்கின்றது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது முக்கிய அமெரிக்க அதிகாரி நிசா பிஸ்வால் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சரும் வாசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு;ள்ளது.