செய்திகள்

இலங்கையுடன் கைகோர்த்துச் செயற்படத் தயாராகவுள்ளோம்: இந்தியத் தூதுவர் சின்ஹா

அமைதியான முறையில் தேர்தல்கள் நடந்தேறியமைக்காக இலங்கை மக்களைப் பாராட்டிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிதர்சனமாக்குவதற்குத் தொடர்ந்தும் உதவிகளை வழங்கவும் கைகோத்துச் செயற்படவும் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியானது இலங்கையில் மாற்றத்தை விரும்பிய மக்களின் அபிலாஷைக்கு செவிசாய்க்கும் அன்னாரது தகைமைக்கு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற 66ஆவது குடியரசுத்தின வைபவத்தில் உரையாற்றும்போதே இலங்கைக்கான சின்கா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் எல்லைப்பாதுகாப்பு படைப்பிரிவினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அணிவகுப்பையும் இந்தியத் தூதுவர் பார்வையிட்டார்.

தனது உரையின் போது இந்திய குடியரசுத்தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் தேசத்திற்கான உரையின் முக்கிய பகுதிகளையும் வாசித்தார். அதேவேளை, தனது உரையில் இலங்கையுடன் இந்தியா மிகவும் சிறப்பானதொரு உறயைக்கொண்டுள்ளதாக கோடிட்டுக்காட்டிய இந்தியத் தூதுவர் புவியியல் சார்ப்பானது மட்டுமன்றி சமயங்கள் கலாசார பழங்கவழக்கங்கள் குடும்ப உறவுகள் மொழிப்பயன்பாடு பொருளாதார தொடர்புகள் மற்றும் அரசியல் புரிந்துணர்வுகள் போன்ற பலவிடயங்களும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையே மிகச்சிறப்பான உறவுநிலவுவதற்கு அடித்தளமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையும் இந்தியாவும் காத்திரமான வளர்ச்சிபெறுகின்ற பொருளாதார வர்த்தக கைகோர்ப்பை அனுபவித்து மகிழ்வதாக சுட்டிக்காட்டிய இந்தியத் தூதுவர், வர்த்தகமும் முதலீடுகளும் அண்மைய ஆண்டுகளில் துரிதமான விரிவாக்கத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 2014ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாத காலப்பகுதியில் நான்கு பில்லியன் ( 400 கோடி) அமெரிக்க டொலர்கள் அளவிற்கு இருதரப்பு வர்த்தகம் வியாபகமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருட்கள் தொடர்பில் காணப்பட்ட வீரியமான வர்த்தகம் இருதரப்பு முதலீடுகளையும் ஊக்குவித்தாக இந்தியத் தூதுவர் கூறினார். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் சிறப்பான ஆர்வத்தைக் காண்பித்ததாகத் தெரிவித்த அவர், ‘இந்தியாவிலேயே உற்பத்திசெய்’என்ற முன்முயற்சித்திட்டமானது இலங்கையின் மேலும் பல நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கவர்ந்திழுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.