செய்திகள்

இலங்கையுடன் வலுவான உறவை எதிர்பார்ப்பதாக பிரிட்டன் தெரிவிப்பு

இலங்கையுடன் வலுவான உறவுக்கு காத்திருப்பதாக பிரித்தானியா தெரிவித்திருக்கிறது.

பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசி மூலம் வாழ்த்திய பின்னர் தனது ட்விட்டரில் செய்திப் பதிவொன்றை அனுப்பிய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ சுவைர் இலங்கையுடன் வலுவான உறவுக்கு எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.