செய்திகள்

இலங்கையை விட்டுப் புறப்பட்டார் பசில் ராஜபக்‌ஷ

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ  இன்று அதிகாலை தனது மனைவி புஸ்பா ராஜபக்சவுடன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின், துபாய் ஊடான அமெரிக்காவின் லோஸ்ஏஞ்சல் நகருக்கான விமானத்தில் அவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் சென்று அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்லவிருக்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான டட்லி ராஜபக்‌ஷவும் நேற்று இலங்கையிலிருந்து றப்பட்டுச் சென்றுள்ளார்.