செய்திகள்

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது: பா.ஜ.க. திட்டவட்டம்

எக்காரணம் கொண்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இன்று வேலூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”எந்த காரணத்தைக் கொண்டும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அதேநேரத்தில், இந்திய-இலங்கை பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்” என்றார்.