செய்திகள்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மக்களைத் தெழிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – செங்கலடியில் முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியூடாக செங்கலடி – பதுளைவீதி வரை சென்று மீண்டும் அஞ்சல் அலுவலகத்தை சென்றடைந்தது.
அஞ்சல் திணைக்களத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான துண்டுப்பரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.





