செய்திகள்

இலங்கை அணிக்கு உளவியல் பாடம் எடுக்கும் ஜெரெமி சினேப்

2015 உலககிண்ணப்போட்டிகளில் மிகவும் நம்பிக்கையற்ற விதத்தில் மெதுவாக ஆரம்பித்த இலங்கை அணி அடுத்த சுற்று நோக்கி முன்னேறியுள்ளது.
அணி மாற்றமடைந்து வருவது களத்தில் வெளிப்படுகின்றஅதேவேளை , கண்ணிற்கு தெரியாமலும் தீவிர முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.  B9J0VznCAAA8jxW-610x374
உலககிண்ணப்போடடிகளில் தங்கள் கவனத்தை தீவிரமாக இலங்கை அணி வீரர்கள் செலுத்துவதற்கு உதவியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போது உளவியலாளருமான ஜெரெமி சினேப்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித்தொடரில் இலங்கையுடன் முன்னர் இணைந்து பணியாற்றிய இவர் மீண்டும் உலககிண்ணபோட்டிகளுக்கு ஓரு வாரத்திற்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.
எனினும் இலங்கை அணியுடன் பணியாற்றுவதில் சில சவால்கள் உள்ளன என்கிறார் அவர்.அவர்கள் தனித்துவமான கலாச்சாரத்தையும்,மொழியையும் கொண்டவர்கள்,சிலர் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள், சிலர் ஆங்கிலம்பேச மாட்டார்கள் இதன் காரணமான ஆங்கிலம் பேச முடியாதவர்களுடன் நான் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளருடன் இணைந்து பணியாற்றுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினேப் அணியின் மூத்த வீரர்களுக்கும், இளையவீரர்களுக்கும் இடையி;ல் கருத்து பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.இதன் மூலம் கிரிக்கெட் நுணுக்கங்கள் சரியாக பகிரப்படும் என கருதும் அவர் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான விடயம் என்கிறார்
இலங்கை அணிவீரர்கள் மிகுந்த மரியாதையுடையவர்கள், குறிப்பாக மூத்த வீரர்களுக்கு அதிக மரியாதையை வழங்குபவர்கள்,நான் வீரர்களின் சிந்தனை,அவர்களுடைய பதட்ட நிலை மற்றும்,தோல்வியடைந்தால், சிறப்பாக விளையாடினால் எப்படி உணர்வார்கள் போன்ற விடயங்களை கேட்டறிந்துள்ளேன்.இளம் வீரர்களை பொறுத்தவரை இவை மிகமுக்கியமான விடயங்கள்,கருத்துப்பரியமாற்றத்தி;ற்கான வாய்ப்புகளை உருவாக்கவிட்டால் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காது, இளம் வீரர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்
நாங்கள் குழுவாக இணைந்து அதனை மேற்கொண்டுள்ளளோம்,வீரர்களுக்கு அது பிடித்துள்ளது.நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பேன்,அவர்கள் அனேகமாக சிங்களத்தில் பதிலளிப்பார்கள்.என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்காக 10 ஓருநாள்போட்டிகளிலும்,ஓரு இருபதிற்குஇருபது போட்டியிலும் விளையாடியுள்ள அவர் விளையாட்டு உளவியலில் பட்டம்பெற்றவர்.ஐபிஎல்லில் ராஜஸ்தான் ரோயல்சிற்காக சேர்வோர்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்
சினேப் காரணமாக பெரிதும் நன்மையடைந்த வீரர்களில் ஓருவர் தினேஸ் சந்திமல்,தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காண்பித்த திறமையையும், தன்னம்பி;க்கையும் இழந்து தத்தளித்துக்கொண்டிருந்தவர் அவர்.
எனினும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நாங்கள்பழைய தினேஸ் சந்திமாலை காணமுடிந்தது.24 பந்துகளில் 54 ஓட்டங்களை அவர்பெற்றார். அதன் பின்னணியிலிருந்தவர் சினேப் என்பது முக்கியமானது.