செய்திகள்

இலங்கை அணியினருக்கான நிதியை வழங்க ஐ.சீ.சீ இணக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கென கிடைக்க வேண்டிய 3இலட்சம் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் நிலவிய அரசியல் தலையீடுகள் மற்றும் இடைக்கால நிர்வாக சபை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உலகக் கிணணப் போட்டியில் கலந்துக் கொண்ட இலங்கை அணியினருக்கென வழங்கப்பட வேண்டிய நிதியை தற்காலிகமாக இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த நிதியை வழங்க அந்த சபை இணக்கம் வெளியிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.