செய்திகள்

இலங்கை அணியின் களத்தடுப்பு பலவீனங்கள் தொடர்கின்றன

அணிவீரர்களால் தவறவிடப்படும் கட்ச்க்கள் மற்றும் ரன்அவுட்கள் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் போது அது மிகவும் கவலை அளிக்கும் விடயமாக அமையும்.

இலங்கை அணி நியுசிலாந்தில் கால் பதித்த தருணத்திலிருந்து இந்த நிலையில் காணப்படுகின்றது.  கேன் வில்லியம்சன் இன்று ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் தவறவிடப்பட்டார்,வாய்ப்பை தவறவிட்டவர் குமார் சங்ககார.  பின்னர் வில்லியம்சன் 57 ஓட்டங்களை பெற்றார்.  சில வாரங்களுக்க முன்னர் வெலிங்டன் டெஸ்டில் வில்லியம்சன் அளித்த வாய்ப்பை தவறவிட்டதனால் அவர் இரட்டை சதத்தை பெற்றதுடன் இலங்கை அணியின் வெற்றிக்கனவை சிதறடித்தார்.

இன்று இரண்டாவது தடவையும் வில்லியம்சன் 27 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை வாய்பொன்றை வழங்கினார். இம்முறை அதனை தவறவிட்டவர் அணிதலைவர் மத்யுஸ்.  37 ஓவரில் கொரே அன்டர்சன் 2 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் வாய்ப்பை வழங்கினார்.  தினேஸ் சந்திமல் அதனை தவறவிட்டார்.  அந்த வாய்ப்பு இலங்கை அணியை பெருமளவிற்கு பாதித்தது.  பின்னர் அதே துடுப்பாட்ட வீரர் 43 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஜீவன்மென்டிஸ் இன்னொரு வாய்ப்பை தவறவிட்டார்.

இலங்கை அணி தவறவிட்ட வாய்ப்புகள் அணியின் தோல்விக்கு; காரணம், அதேவேளை அணியின் மனோநிலையையையும் அவை வெளிப்படுத்துகின்றன. ஓக்டோபரிற்கு பின்னர் அணி விளையாடிய 19 ஓருநாள்போட்டிகளில் 12 இல் தோல்வியடைந்துள்ளது.

அணியின் திறமை குறித்து சந்தேகமில்லை.  இருபதிற்கு இருபது கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த 8 வீரர்கள் நியுசிலாந்துடனான போட்டியில் விளையாடினர்.  எட்டு மாதத்திற்கு முன்னர் அனைத்தும் சிறப்பாக காணப்பட்டது.அணியின் அனைத்து வீரர்களின் திறமையும் இணைந்து அணி ஆபத்தானதாக காணப்பட்டது. குலசேகர ஓட்டங்களை பெற்றார். தில்சான் விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி தொடர்தோல்விகளை தழுவிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் அனைத்து பலவீனங்களும் வெளித்தெரிகின்றன. பந்துகளை துரத்துவதற்கு மலிங்க, ஹேரத் போன்ற வீரர்கள் பலத்த சிரமப்படுகின்றனர். இளம் விPரர்களின் களத்தடுப்பு கூட மோசமானதாக காணப்படுகின்றது. இன்றை போட்டியின் முடிவை மாற்றிய விடயம் அணியின் களத்தடுப்பு என்பதை திரிமன்ன ஏற்றுக்கொள்கிறார்.நாங்கள் சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை அதனால் தோற்றோம் என்கிறார் அவர்.