செய்திகள்

இலங்கை அணியின் மோசமான சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்கு வந்துள்ளது.

இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி இருந்ததுது.

இதன்படி இந்திய அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.

இந்நிலையில் நேற்று தமது 860 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய இலங்கை அணி 428 ஆவது தோல்வியை பெற்று தோல்விப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.