செய்திகள்

இலங்கை அணியின் லகிரு திரிமான்ன, பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் ஆகியோருக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் லகிரு திரிமான்ன மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்தியதீவுகளுடனா தொடரில் கலந்துகொள்ள இலங்கை அணியினர் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இவர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)