செய்திகள்

இலங்கை அணி குறித்து ஜெயசூர்ய அதிருப்தி

2015 உலககிண்ணப்போட்டிகளுக்கு இலங்கை அணிதயாராகும் விதம் குறித்து தெரிவுக்குழுவின் தலைவர் சனத்ஜெயசூர்ய ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.
நியுசிலாந்தில் நடைபெறுபவைகள் குறித்து நான் கவலைகொண்டுள்ளேன்,என இன்று இலங்கை அணி தொடர்தோல்வியை சந்தித்தபின்னர் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சிலவாரங்களில் நாங்கள் முன்னே;ற்றம்காணவேண்டிய விடயங்கள் உள்ளன, அவற்றை சரிசெய்வோம் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சே எமக்கு அதிககவலை அளிக்கின்றது, அவர்கள் முன்கூட்டியே நெருக்கடியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து திட்டமிடவேண்டும்.மலிங்க அணியில் இல்லாததால்பந்துவீச்சாளர்கள் மத்தியில் அனுபமின்மை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலிங்க மீண்டும் பந்துவீச ஆரம்பித்துள்ளார்,அவர் உடல் வலி எதுவும் இல்லாமல் பந்துவீசினார், என்றும் தெரிவித்துள்ள ஜெயசூர்ய பின்வரிசை ஆட்டக்காரர்கள் குறித்தும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அவர்கள் அதனை பயன்படுத்த வேண்டும், நான்காவது போட்டியில் நாங்கள் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கவேண்டும், ஜீவன்மென்டிஸ், திசாரா பெரேரா ஆகியோர்,இன்னமும் அதிக பங்களிப்பை செய்யவேண்டும் , பந்துவீச்சிலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.